டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாஜகவுக்கு 20 தொகுதிகள்: கவலையோ. சந்தோஷமோ இல்லை - எல்.முருகன் பேட்டி

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்தால் கவலையோ, சந்தோஷமோ இல்லை என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். 

News image
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
Updated On :6 மார்ச் 2021, 5:35 am

DIN


திருச்சி: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்தால் கவலையோ, சந்தோஷமோ இல்லை என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். 

அதிமுக கூட்டணியில் முன்னதாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடா்ந்து, தொகுதிப் பங்கீடு தொடா்பாக அதிமுக, பாஜக தலைவா்கள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தற்போது பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியதாவது: 

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் கவலையோ, சந்தோஷமோ இல்லை. ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் எங்களின் இலக்கு வெற்றியாகத்தான் இருக்கும். விரைவில் பாஜக சார்பில் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்று முருகன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.