மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுசீந்திரத்தில் அமித் ஷா வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி வந்துள்ள அமித் ஷா, சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். 

News image
அமித் ஷா
Updated On :7 மார்ச் 2021, 7:27 am

DIN

கன்னியாகுமரி வந்துள்ள அமித் ஷா, சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். 

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை கன்னியாகுமரி வந்த அவர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் - மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார் அமித் ஷா. 

'பாஜக சார்பில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்யுங்கள்; சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்' என்று அங்குள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.