சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாமக தொகுதிகள் இறுதியானது: ஜி.கே.மணி

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

News image
பாமக தலைவர் ஜி.கே.மணி (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 7:42 pm

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கான தொகுதிகள் நள்ளிரவில் இறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாமகவினரும் அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர்.

பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு இறுதி செய்ய வேண்டிய தொகுதிகள் குறித்து ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசியதாவது, ''சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக போட்டியிடும்  தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு காலை (புதன்கிழமை) வெளியாகும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.