எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு: மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் ரத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image
ஸ்டாலின்
Updated On :10 மார்ச் 2021, 4:03 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசாரத்தில் அனைத்து மாவட்ட மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகிறார். 

அந்த வகையில், வருகிற மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லவிருந்தார்.

தற்போது தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும், திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுவதால் மு.க.ஸ்டாலினின் ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு, பிரசாரங்கள் தொடரும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் திமுக இன்று வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.