கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: ஜி.கே. வாசன்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

News image
அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: ஜி.கே. வாசன்
Updated On :11 மார்ச் 2021, 6:14 am

DIN


சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - தமாகா இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன், பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினார்.

மேலும், தமாகா சார்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில்  அதிமுக 6 தொகுதிகளைத் தருவதாகக் கூறுகிறார்கள். கூடுதல் தொகுதிகளைப் பெற தொடர்ந்து பேசி வருகிறோம், தொகுதிகளை உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடைசி நிமிடம் வரை போராட்டம் தொடரும். வெல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.