இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
திமுக கூட்டணியில் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.


சென்னை: திமுக கூட்டணியில் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை தொகுதிகள் உள்பட 6 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா அறிவாலயத்தில் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்து, ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
பின்னர் வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூட்டணி தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவு பெற்று, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.
அதன்படி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி (தனி)
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி)
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு
கோவை மாவட்டம் வால்பாறை (தனி)
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை என ஆறு தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...