பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாட்டில் புதிதாக 22,854 பேருக்கு கரோனா; 126 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 126 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

News image
நாட்டில் புதிதாக 22,854 பேருக்கு கரோனா; 126 பேர் பலி
Updated On :11 மார்ச் 2021, 4:14 am

DIN


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 126 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 22,854 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,12,85,561 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,89,226 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 126 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,58,189-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 18,100 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,09,38,146-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.