மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கல்?: பறக்கும் படை சோதனை
கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.


கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கன் சாலையில் உள்ள கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தேர்தல் பறக்கும் படையினர் சென்றனர். ஆனால், வருமான வரித்துறையினர் இல்லாமல் சோதனை நடத்த முடியாத காரணத்தால் வீட்டின் முன்பு சில நேரம் காத்திருந்தனர்.

அதற்குள்ளாக சம்பவம் குறித்து தகவலறிந்த திமுகவினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட பொறியாளரின் வீட்டின் முன்னாள் குவிந்து தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பறக்கும் படையினர் அவரது வீட்டுக்குள் சென்று சோதனையை தொடர்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...