பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜெயலலிதா நினைவிடம்: கரோனா விதிகளை மீறியவர்களுக்கு எதிரான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
ஜெயலலிதா நினைவிடம்: கரோனா விதிகளை மீறியவர்களுக்கு எதிரான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
Updated On :11 மார்ச் 2021, 7:47 am

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவின் போது, கரோனா  தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர், கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பின்னரும், முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தலைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. 

இந்த நிலையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள், கரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில், நினைவிட திறப்பு விழாவுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்களை காவல்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். எனவே கரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.