பாமகவின் 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் 3ஆவது மற்றும் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் 3ஆவது மற்றும் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 19 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரு பட்டியல்கள் நேற்று வெளியிடப் பட்டன.
மீதமுள்ள கீழ்க்கண்ட 4 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
மேட்டூர் - எஸ். சதாசிவம்,
பூந்தமல்லி (தனி) - எஸ்.எக்ஸ் இராஜமன்னார்,
சங்கராபுரம் - இராஜா, எம்.பி.பி.எஸ்.,
வந்தவாசி (தனி) - எஸ். முரளி சங்கர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...