கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

சேந்தமங்கலம்: அதிமுக எம்.எல்.ஏ. சுயேச்சையாக போட்டி

சேந்தமங்கலம் பழங்குடியின தனி தொகுதியில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் தனித்துப் போட்டியிடுகிறார்.

News image
சி.சந்திரசேகரன்.
Updated On :11 மார்ச் 2021, 6:41 am

DIN

நாமக்கல்: சேந்தமங்கலம் பழங்குடியின தனி தொகுதியில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் தனித்துப் போட்டியிடுகிறார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி அடிவார பகுதியை சேர்ந்தவர் சி. சந்திரசேகரன்(52). தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட திமுகவில் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

1996-ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவானார். அதன் பின்னர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.

2016-இல் அதே சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.  திமுக வேட்பாளர் பொன்னுசாமியை விட சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சேந்தமங்கலம் மட்டும் கொல்லிமலைக்கு பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த அவர் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார்.

மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த 4 பேர் மீண்டும் போட்டியிடும் நிலையில் சந்திரசேகரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அமைச்சர் தங்கமணி சந்திரசேகரன் பெயரை பரிந்துரைக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வியாழக்கிழமை காலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதனை வலியுறுத்தும் விதமாக கொல்லிமலையில் இன்று மதியம் 2 மணியளவில் மலைவாழ் மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். 

இது குறித்து அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனிடம் கேட்டபோது: வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக களம் இறங்க உள்ளேன். கொல்லிமலையில் இன்று மதியம் 2 மணிக்கு மலைவாழ் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.