தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தம்மம்பட்டியில் காவலர் - ராணுவ வீரர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தம்மம்பட்டியில் மாலை வரை காவலர் - ராணுவ வீரர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. 

News image
Updated On :11 மார்ச் 2021, 12:20 pm

தம்மம்பட்டியில் மாலை வரை காவலர் - ராணுவ வீரர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. 

சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.6-ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மக்கள் பாதுகாப்பாகத் தேர்தலில் வாக்களிக்க உதவியாக, பாதுகாப்பாக இருந்து பக்கபலமாக இருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம், வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு தம்மம்பட்டியில் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தொடங்கி, உடையார்பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி, நடுவீதி, திருச்சி மெயின் ரோடு வழியே சென்று தம்மம்பட்டி காவல் நிலையம் வரை சென்று, மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. 

Story image

இதற்கு  சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. அசோகன் தலைமையில்  ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் , காவல்துறையினர் 75 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 60 பேர் உள்பட 150 பேர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.