தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குளம் அருகே வாகன விபத்து: தந்தை பலி; மகன் படுகாயம்

ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.

News image

விபத்தில் இறந்தவர்

Updated On :12 மார்ச் 2021, 5:54 am

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் மகன் மீனாட்சிசுந்தரம்(42). இவர் தனது பைக்கில் மகன் அபிஷேக்குடன் (10) சிவ ராத்திரியை முன்னிட்டு முக்கூடல் பகுதியில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஆலங்குளம் வழியாக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அடைக்கலபட்டணம் அருகேயுள்ள தனியார் தவிட்டு எண்ணெய் ஆலை அருகே வந்த போது, முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் மீனாட்சிசுந்தரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் காயமைடந்தார்.

ஆலங்குலம் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனாட்சி சுந்தரத்தின் உடல் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.