லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுச்சேரி : 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
புதுச்சேரி : 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Updated On :13 மார்ச் 2021, 10:18 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு தொகுதிக்கான வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வெளியிட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலில், காலாப்பட்டு - எஸ்.  முத்துவேல், காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம், திருப்புவனை (தனி)  தொகுதியில் ஏ. முகிலன், நிரவி திருப்பட்டினத்தில் எம். நாகதியாகராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வேட்பாளர் பட்டியல்..

Story image

திமுக போட்டியிடும் பாகூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸும் - திமுகவும் கூட்டணி அமைத்து பல கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது என்பது குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனா்.

காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்குத் தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸும் கிட்டத்தட்ட சம அளவில் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டுள்ளன. அதிக இடங்களில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சியின் ஆட்சி அமைப்பது என்கிற முடிவுடன் திமுக - காங்கிரஸ் தோ்தலைச் சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.