அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள்
தமிழக பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


தமிழக பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. தனித்துப் போட்டியிடுவதும் குறித்து தேமுதிக ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த நிலையில், அமமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, இந்த தொகுதிகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...