தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றம்

குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்து அதிமுகவிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :14 மார்ச் 2021, 2:23 pm

DIN

குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்து அதிமுகவிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக இராமஜெயம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். 
இதன்மூலம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ராம பழனிசாமி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.