சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.33,816-க்கு விற்பனை
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.


சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது.
நிகழாண்டில் தொடக்கம் முதல் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தாலும், கடந்த வாரம் மீண்டும் விலை குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதன் பிறகு, விலை மீண்டும் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.33,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.3 குறைந்து, ரூ.4,227 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.71.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.71,500 ஆகவும் விற்கப்படுகிறது.
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,227
1 சவரன் தங்கம்...............................33,816
1 கிராம் வெள்ளி.............................71.50
1 கிலோ வெள்ளி............................71,500
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,230
1 சவரன் தங்கம்...............................33,840
1 கிராம் வெள்ளி.............................71.40
1 கிலோ வெள்ளி.............................71,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...