ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 மார்ச் 2021, 7:16 am

DIN

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அயனாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். 

1984 முதல் 8 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள ஸ்டாலின் இதுவரை 2 முறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார். 

சென்னை- கொளத்தூர் தொகுதியில் 2011, 2016 தேர்தல்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 9 ஆவது முறையாகவும் ஸ்டாலின் போட்டியிடுகிறார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.