47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதிக்கு உள்பட்ட பந்தய சாலை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் அங்கு நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.

News image
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கமல்ஹாசன்
Updated On :16 மார்ச் 2021, 6:59 am

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதற்காக திங்கள்கிழமை கோவை வந்த அவர் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மாலை ராஜ வீதி தேர் நிலை திடல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

Story image

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அவர் போட்டியிடும் தொகுதிக்கு உள்பட்ட பந்தய சாலை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் அங்கு நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதிக்கு வந்த அவர் ஆவின் பாலகம் அமைந்துள்ள இடத்தில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார்.

Story image

இதன் பின்னர் 80 அடி சாலையில் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பா தேவர் துவங்கிய வீரமாருதி தேகப்பயிற்சி சாலை சென்றவர் அங்கு சிலம்ப பயிற்சி மேற்கொண்டவர்களுடன் பேசினார். பின்னர் அங்கு பயிற்சி மேற்கொண்டவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினார். 

Story image

இதன் பின்னர் தேகப்பயிற்சி இடத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சின்னப்பா தேவருடன் உள்ள புகைப்படங்கள், ஷூட்டிங் நடந்தபோது எடுத்த புகைப்படங்கள் தேகப்பயிற்சி ஆண்டு விழா படங்களைப் பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.