/

ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் இயங்கும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

News image
ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் இயங்கும்: பள்ளிக் கல்வித் துறை
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN


சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு மட்டும் படிப்படியாகத் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதியோடு பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது.

எனவே, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் தமிழகத்தில்  பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும், பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.