9, 10, 11-ம் வகுப்புகளுக்கு எந்தத் தேர்வும் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி, 9, 10, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களின் நலன் கருதி, 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகளில் இந்த வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் கிடையாது என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...