பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இன்று பிற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News image
Updated On :18 மார்ச் 2021, 9:24 am

DIN

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இன்று பிற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரவைத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று அவரவர் தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதன்படி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும் திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, மதுரை சாலையில் உள்ள கட்சி அலுவலத்தில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் ஊர்வலமாக வந்தார். அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.