காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகத் திகழ்வது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் கோவில் செயல் அலுவலர்கள் ஆ. குமரன், வெள்ளைச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகா, காஞ்சிபுரம் சஙகரமடத்தின் ஆஸ்தான ஸ்தபதி நந்தகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவினை தொடர்ந்து இம்மாதம் 23 ஆம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் இரவு வெள்ளித் தேர் உற்சவமும் நடைபெறுகிறது. மறுநாள் 24 ஆம் தேதி கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இராமநாதசுவாமி இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ஜெயா.மற்றும் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


