திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சேந்தமங்கலத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சுயேச்சையாக வேட்பு மனு

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் வியாழக்கிழமை சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்தார்.

News image

சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்யும் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ சி. சந்திரசேகரன்.

Updated On :18 மார்ச் 2021, 11:36 am IST


நாமக்கல்: சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் வியாழக்கிழமை சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்தார்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் 1996 முதல் 2001, 2016 முதல் 2021 வரை அதிமுக எம்எல்ஏவாக பணியாற்றியவர் சி. சந்திரசேகரன். இந்த முறை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு எஸ். சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். இதற்காக சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக தரப்பில் இவருக்கு மிரட்டல் விடுத்து வந்த நிலையிலும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வியாழக்கிழமை அவர் சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ரமேஷிடம் மனுத் தாக்கல் செய்தார். 

முன்னதாக தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் 3 போலீஸார் உடன் செல்லும் வகையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.