ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேர்தல் சவாலை வெல்வேன்: குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து  போட்டியிட்டு வெல்வேன் என்று பாஜக வேட்பாளரான குஷ்பு தெரிவித்துள்ளார்.

News image
குஷ்பு
Updated On :18 மார்ச் 2021, 9:37 am

DIN

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து  போட்டியிட்டு வெல்வேன் என்று பாஜக வேட்பாளரான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் குஷ்பு இன்று (மார்ச் 18) வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக வந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியதாவது, ''ஓர் தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. 

பாஜக - அதிமுக அமைத்துள்ளது வெற்றிக் கூட்டணி. தேர்தல் களத்தில் எனக்கு உற்சாகமளிக்கும் அனைத்து கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி.

2019- நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு சிறுபான்மை மக்களும் வாக்களித்துள்ளனர்.

வாழ்க்கையே எனக்கு சவாலாகத்தான் இருந்துள்ளது. இந்த தேர்தல் சவாலையும் வென்று வருவேன்'' என்று கூறினார்.

திமுக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் நா.எழிலன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.