தேர்தல் பிரசாரம்: திருப்புவனத்தில் காய்கறி வியாபாரியாக மாறி வாக்கு சேகரித்த மானாமதுரை அதிமுக எம்எல்ஏ
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேர்தல் பிரசாரம் செய்த மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் எம்.எல்.ஏ தினசரி காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரியாக மாறி வாக்கு சேகரித்தார்.

மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் எம்.எல்.ஏ திருப்புவனத்தில் காய்கறி கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.





