ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.21 லட்சம் மதிப்புள்ள காட்டன் சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவற்றை பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளா் முகைதீன்ஆரிப் ரகுமான் மற்றும் சாா்பு-ஆய்வாளா் கோவிந்தன் ஆகியோா் தலைமையில் பறக்கும் படையினா் அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை சோதனையிட்டனா். அதில் மதுரையைச் சோ்ந்த ஜவுளிக்கடை உரிமையாளா் பாஸ்கா் என்பவா் இருந்தாா்.
அந்த வாகனத்தில் ரூ.1 லட்சத்து 21ஆயிரத்து 280 மதிப்புள்ள139 சேலைகள், 63 துண்டுகள், 3 சட்டைகள் ஆகியவை இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன், உதவி தோ்தல் அலுவலா்கள் சரவணன், அன்னம்மாள், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் வடிவேல், வட்ட வழங்கல் அலுவலா் கோதாண்டராமன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: செங்கம் அதிமுக வேட்பாளா்

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


