தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெரியகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சிலம்ப பேரணி

பெரியகுளத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப மாணவர்கள் இன்று சிலம்பம் சுற்றி

News image
100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி பெரியகுளம் பகுதியில் சிலம்பம் சுற்றி பேரணியில் ஈடுபட்ட அக்னீவிரனன் சிலம்ப மாணவர்கள் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர்
Updated On :21 மார்ச் 2021, 6:50 am

DIN



பெரியகுளத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப மாணவர்கள் இன்று சிலம்பம் சுற்றி பேரணியில் ஈடுபட்டனர்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். விழுதுகள் இளைஞர் மன்ற துணைச்செயலாளர் அஜீத்பாண்டி முன்னிலை வகித்தார்.

Story image

சிலம்ப மாணவர்கள் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்தனர்.

பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் பெரியகுளம் பெருமாள் கோயில் அருகே முடிவடைந்தது. இந்த பேரணியில்  பெரியகுளம் நகராட்சி பொறியாளர் சண்மூகவடிவு, நகர அமைப்பாளர் நிஜந்தன், விழுதுகள் இளைஞர் மன்ற நிர்வாகி சௌந்தரபாண்டி, சிவனேஷ் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப ஆசான் முத்தையாமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.