விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனி அருகே இளைஞர் மர்மச் சாவு: 2வது நாளாக உறவினர்கள் சாலை மறியல்

தேனி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
தேனி அருகே இளைஞர் மர்மச் சாவு
Updated On :23 மார்ச் 2021, 9:46 am

DIN

தேனி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் உறவினர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Story image

தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(28). இவர் அடிக்கடி அருகே உள்ள கோழிப் பண்ணையில் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்தார். திங்கள்கிழமை பணியின்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

Story image

இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் பிரபாகரனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனை முன்பு தேனி மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள் இவ்வழக்கு குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தும் முறை பிரபாகரனின் உடலை வாங்கப் போவதில்லை என தெரிவித்தனர். 

Story image

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு வந்திருந்த அவரது உறவினர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக தேனி மதுரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த காவல்துறை தடுப்புகளைச் சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Story image

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.