ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆட்சியமைத்ததும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: ஸ்டாலின்

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல்சட்டப் பேரவையில் வேளாண் சட்டங்களைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

News image
பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்
Updated On :24 மார்ச் 2021, 7:12 am

DIN

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல்சட்டப் பேரவையில் வேளாண் சட்டங்களைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஆத்தூர், கெங்கவல்லி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளர்களையும் கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைக் கண்டித்து மம்தா பானர்ஜி மற்றும் கேரள சட்டப்பேரவையைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்ததுபோல் திமுக ஆட்சி அமைத்து முதல் சட்டப்பேரவையில் வேளாண்சட்டங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

நெல் குவிண்டால் ரூ.8,500, கரும்பு ரூ.4,000, நிர்ணயிக்கப்படும். இப்பகுதிக்கு மேட்டூர் உபரி நீர் கொண்டுவரப்படும். தலைவாசலில் குளிர் பதனக் கிடங்கு கெங்கவல்லியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.

ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து முதல்வராக பொறுப்பேற்றவுடன் நல்லாட்சி தொடர வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் எடப்பாடி கே.பழனிசாமி பொய் சொல்லி வருகிறார்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.