டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போடி: த.மா.கா. பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை

 போடியில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையின் தேர்தல் பிரிவினர் சோதனை  நடத்தி வருகின்றனர்.

News image
தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Updated On :27 ஜனவரி 2024, 7:50 pm

DIN

போடி:   போடியில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையின் தேர்தல் பிரிவினர் சோதனை  நடத்தி வருகின்றனர்.

போடி எஸ்.எஸ்.புரத்தில் வசிப்பவர் அங்குவேல் (55). இவர் தமிழ் மாநில காங்கிரஸ் நகர நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். ஏலக்காய் வியாபாரமும் செய்து வருகிறார்.

Story image

இவரது வீட்டில் வியாழக் கிழமை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வந்தனர். வீடு பூட்டியிருந்தது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு அங்கு வேல் வந்தார்.

அவரைத் தொடர்ந்து வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையில்  அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்தனர்.

Story image

அவர்கள் அங்குவேல் வீட்டிற்குள் சென்று சோதனை செய்து வருகின்றனர்.     இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கூடியதால் போடி நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில்  கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.