47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முகக்கவசம் அணியாததே கரோனா பரவக் காரணம்: ராதாகிருஷ்ணன்

முகக்கவசம் அணியாததே தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவக் காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Updated On :26 மார்ச் 2021, 4:56 am

DIN

முகக்கவசம் அணியாததே தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவக் காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில்  நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா அதிகரிப்பதற்கு வெளிநாடுகளில் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமில்லை. தமிழகத்தில் மக்கள் முகக்கவசம் அணியததாலேயே கரோனா மீண்டும் பரவி வருகிறது. முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் கைவிடக் கூடாது.

25 லட்சம் கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளோம். இன்னும் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.