வீழ்த்த நினைப்பவர்கள் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது: மு.க.ஸ்டாலின்
திமுகவை வீழ்த்த நினைக்கும் எந்த துரோக சக்திகளாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுகவை வீழ்த்த நினைக்கும் எந்த துரோக சக்திகளாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தலுக்கு முன்னதாகவே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் முதல்வர். தோல்வியை ஒப்புக்கொண்ட முதல்வரை பாராட்டுகிறேன். கலைஞர் இல்லையென்பதால் திமுகவை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுகிறார்கள்.

ஆனால், திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் அதனை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எந்த துரோக சக்திகளும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
அண்ணா காலத்திலிருந்தே திமுகவை அழிக்கப் போகிறோம் என பலர் கூறி வருகின்றனர். திமுகவை வீழ்த்த பலர் ஒன்றுகூடி செயல்பட்டனர். ஆனால், எதுவும் செய்யமுடியவில்லை. திமுகவை அழிக்க ஒருவர்கூட இன்னும் பிறக்கவில்லை; பிறக்கப் போவதுமில்லை.

முதல்வர் நீண்டகாலம் வாழ வேண்டும். ஏனெனில் கலைஞர் இல்லாத திமுக ஆட்சியை அவர் பார்க்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...