ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக வேட்பாளருக்கு ஆதரவு: அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் திருப்புலிவனம் ஊராட்சி செயலாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
திமுக வேட்பாளருக்கு ஆதரவு: அரசு ஊழியர் பணியிடை நீக்கம்
Updated On :30 மார்ச் 2021, 12:43 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் திருப்புலிவனம் ஊராட்சி செயலாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து உத்தரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்புலிவனம் ஊராட்சி செயலாளர்  சுபாஷ்(43) அக்கிராம மக்களுடன் சென்று சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

இந்த விடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியதையடுத்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்  கி.முத்துக்குமார் சுபாஷை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

திங்கள்கிழமை இதே திமுக வேட்பாளர் க.சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக உத்தரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் வெ.சதீஷை பணியிடை நீக்கம் செய்திருந்த நிலையில் இரண்டாவதாக சுபாஷ் பணியிடை நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.