ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முதல்வராகவிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

News image
Updated On :4 மே 2021, 1:08 pm

DIN

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முதல்வராகவிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து அவருடன் உரையாடுகையில், ‘தேர்தல் பணிகள் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக கரோனா தடுப்புப் பணிகள் முறையாக நடக்கவில்லை; முடங்கிப் போய்விட்டன’ என்ற தம் கவலையைத் தெரிவித்தார்.

அதற்கு ஸ்டாலின், ‘கரோனா தடுப்புப் பணிகளை முழுவேகத்தில் இயக்குவேன்; கொடிய கரோனாவில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றுவதே என்னுடைய முதல் பணி; இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உழைப்பேன்’ என்றார்.

உங்கள் கருத்தை, ‘நான் செய்தியாளர்களிடம் சொல்லட்டுமா?’ என்று வைகோ கேட்டபோது, தாராளமாகச் சொல்லுங்கள் என்று, ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து வைகோ பேசும்போது, ‘திராவிட இயக்க வரலாற்றிலேயே மாபெரும் மகத்தான வெற்றியை ஈட்டி இருக்கின்றீர்கள். சமூக நீதியைக் காக்க, சமத்துவத்தைப் பாதுகாக்க, கூட்டு ஆட்சிக் கொள்கையைக் காக்க, மதச்சார்பு இன்மையைக் கடைப்பிடிக்க, ஒட்டுமொத்த இந்தியாவும் இனி உற்று நோக்குகின்ற இடம் சென்னையாகத்தான் இருக்கும்; தமிழ்நாடு முதல்வரின் தலைமையில்தான் இருக்கும் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.