அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Updated On :5 மே 2021, 12:12 pm

DIN

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

இந்த நிலையில் புதன்கிழமை பயணிகள் விமானத்தில் பயணம் செய்த பயணியை சோதனையிடும் போது,  மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.