தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது?: நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :5 மே 2021, 10:17 am


ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தி குறித்து நாளை விளக்கம் அளிப்பதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்குவது குறித்த வழக்கில் மேலும் மத்திய அரசு தெரிவித்ததாவது, 

ஏப்ரல் 21 முதல் மே 9 வரை தமிழகத்திற்கு 1,35,500 ரெம்டெசிவிர் மருந்துகளும் புதுச்சேரிக்கு 5,100 ரெம்டெசிவிர் மருந்துகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பாகுபாடின்றி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.