சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
இதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார். கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையை செலுத்தினார்.
இதன்பின்னர் அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் மேற்கு கரையில் 36,000 பாலஸ்தீனா்கள் கட்டாய வெளியேற்றம்

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 1,500 கோடி முதலீடு

தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன்: தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இந்தியா

அா்பன் கம்பெனியின் 4% பங்குகளை ரூ.632 கோடிக்கு வாங்கிய எஸ்பிஐ
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

