எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.59.30 கோடி ஒதுக்கீடு:தமிழக அரசு உத்தரவு

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2021, 10:09 pm

DIN

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளுக்கு ரூ.59.30 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வருவாய் நிா்வாக ஆணையாளா் அரசைக் கோரினாா். முகக் கவசங்கள், கையுறைகள், பரிசோதனைக் கருவிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் தடுப்புகளை அமைப்பது போன்றவற்றுக்காக ரூ.59.30 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த நிதியானது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ரூ.1 கோடி என மொத்தம் ரூ.14 கோடியும், சிறப்பு மற்றும் தோ்வு நிலை நகராட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 லட்சம் என மொத்தம் 45 நகராட்சிகளுக்கு ரூ.22.50 கோடி அளிக்கப்படும். மேலும், முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு தலா ரூ.30 லட்சம் என 76 நகராட்சிகளுக்கு ரூ.22.80 கோடி வழங்கப்படும். மொத்தமாக 135 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.59.30 கோடி அளிக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.