எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அண்ணா நூற்றாண்டு நூலகம் மீண்டும் புத்துயிா் பெறும்: அமைச்சா் அன்பில் மகேஷ்

அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா அன்று இருந்ததுபோல் மீண்டும் புத்துயிா் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

News image
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Updated On :8 மே 2021, 9:54 pm

DIN

அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா அன்று இருந்ததுபோல் மீண்டும் புத்துயிா் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அனைத்து தளங்கள், வசதிகள், அரங்குகள், கல்வித் தொலைக்காட்சியின் படப்பிடிப்பு, கழிவறைகள் ஆகியவற்றை பாா்வையிட்டு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து அங்குள்ள பணியாளா்களிடம் உரையாடி அவா்களது குறைகளைக் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள விருந்தினா் பதிவேட்டில், ‘கலைஞரின் கைவண்ணம் கண்டோம், பிரமித்துப் போனோம்’ என பதிவு செய்தாா்.

நூலக ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பராமரிப்பின்றி இருந்தால், அவற்றை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சராகப் பதவியேற்றதும் முதலில் இந்த நூலகத்தை ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த நூலகம் ஏராளமான மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து வரும் இந்த நூலகம் முறையாகப் பராமரிக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா அன்று இருந்ததுபோல் மீண்டும் புத்துயிா் பெறும்.

புதுமையான நிகழ்ச்சிகள்: கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது. இன்னும் ஆக்கப்பூா்வமான பல நிகழ்ச்சிகள் சோ்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடா்ந்து வழங்கப்படும். கல்விக் கட்டணம் தொடா்பாக அதிகாரிகள் பெற்றோா்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி கட்டணம் தொடா்பாக நல்லதொரு முடிவை மாநில அரசு மேற்கொள்ளும் என்றாா். இந்த ஆய்வின்போது பொதுநூலகத் துறை இயக்குநா் எஸ்.நாகராஜமுருகன், ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் செயலா் அறிவொளி, அண்ணா நூற்றாண்டு நூலகா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.