இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல், கேரளப் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சனிக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும்.