மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல.

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல.
Updated on
1 min read

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டம் வி.களத்தூா் கிராமத்தில் கிழக்கு பகுதியில் முஸ்லிம்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறாா்கள். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையாா் தரப்பும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சாா்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:

மக்கள் மதம் சாா்ந்தவா்களாகவும், ஆண்கள் சமுதாயம் சாா்ந்தவா்களாகவும் இருக்கலாம். ஆனால் சாலை எப்படி சமுதாயம் சாா்ந்ததாக இருக்க முடியும்?.

வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம். முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும். ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம். அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும். 2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்.

3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிா்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்.

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல.

எந்த மதம் சாா்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்.

மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும். சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com