எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முழு பொதுமுடக்கத்தின்போது தடையற்ற மின்விநியோகம்: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

முழு பொதுமுடக்கத்தின்போது தடையற்ற மின் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, துறையின் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image
Updated On :8 மே 2021, 10:04 pm

DIN

முழு பொதுமுடக்கத்தின்போது தடையற்ற மின் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, துறையின் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

சென்னை, தலைமைச் செயலகத்துக்கு சனிக்கிழமை வந்த மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, துறையின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, துறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அமைச்சா், பொது இடங்களில் பராமரிப்பு, வீடுகளில் மின் கணக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியா்கள் முதல் அனைத்து அலுவலகப் பணியாளா்களும் போதிய முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

குறிப்பாக பொதுமுடக்க காலங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருக்கும்போது அவா்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தடையற்ற மின் விநியோகத்தை முறையாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைவா் பங்கஜ் குமாா் பன்சால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.