எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆக்சிஜன் பிரச்னையை தீர்க்க உச்சநீதிமன்ற வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவர்கள்

கரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பிரச்னைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அளவிலான வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளன

News image
வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள் ஜெ.வி. பீட்டர், ககந்தீப்காங்
Updated On :9 மே 2021, 9:57 am

DIN


வேலூர்: கரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பிரச்னைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அளவிலான வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நாளளொன்றுக்கு 4 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் இடநெருக்கடி ஏற்பட்டிருப்ப துடன், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்காலிகமாக இப்பிரச்னையை தவிர்க்க பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அதேசமயம், ஆக்ஸிஜன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, கரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பிரச்னைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் தேசிய அளவிலான வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. 12 பேர் கொண்ட இந்த குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள் ககந்தீப்காங், ஜெ.வி. பீட்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி தனஞ்செய சந்திரசூட் நேரடியாக இவ்விரு மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசி இந்த குழுவில் இடம்பெற அழைப்பு விடுத்ததன்பேரில் அவர்கள் இந்த தேசிய அளவிலான வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருப் பதாக சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு ஆக்ஸிஜன் தேவை, இந்த மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை எப்படி வினியாகம் செய்வது ஆகியவை குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு இந்த குழு பரிந்துரை செய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.