4,575 சிறப்புப் பேருந்துகளில் 2.05 லட்சம் பேர் பயணம்
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்ட 4,575 சிறப்புப் பேருந்துகளில் மொத்தமாக 2.05 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.


கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்ட 4,575 சிறப்புப் பேருந்துகளில் மொத்தமாக 2.05 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
ஊரடங்கினை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிட ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்த வகையில், மே 8 முதல் 9-ஆம் தேதி நள்ளிரவு நிலவரப்படி, சென்னையிலிருந்து 4,575 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அந்தப் பேருந்துகளில் 2,05,875 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...