வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
டிஜிபி திரிபாதி
Updated On :13 மே 2021, 4:00 pm

DIN


தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல் மக்கள் தவிர்க்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இந்த முழு ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் வெளியில் நடமாடுவதாகவும், அதிக அளவு வாகனங்கள் வெளியில் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக இன்று கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா வழிகாட்டுதலை ஒரு சிலர் சரியாக பின்பற்றாததால் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.