சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கரோனாவுக்கு அருண்ராஜா காமராஜின் மனைவி காலமானார் 

கரோனா தொற்றால் இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி காலமானார்.  

News image
Updated On :17 மே 2021, 3:42 am

DIN

கரோனா தொற்றால் இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி காலமானார்.  

அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா(38). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் அவர் காலமானார். அருண்காமராஜின் மனைவி சிந்துஜா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இணையதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே அருண்ராஜா காமராஜூக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.