ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

அரிய வகை பிறவி இருதய குறைபாட்டுக்கு ஊடுருவல் முறையில் சிகிச்சை

மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 64 வயது நபரின் அரிய வகை பிறவி இருதய குறைபாட்டுக்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

News image

பட விளக்கம்: அரிய வகை பிறவி இருதய குறைபாட்டுக்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறை சிகிச்சை குறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதவியல் துறைத் தலைவா் ஆா். சிவக்குமாா், மருத்துவா்கள் எஸ். குமாா், என். கணேசன் உள்ளிட்டோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:29 pm

மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 64 வயது நபரின் அரிய வகை பிறவி இருதய குறைபாட்டுக்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இருதவியல் துறைத் தலைவா் ஆா். சிவக்குமாா் கூறியதாவது:

மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த 64 வயதுடைய ஆணுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டதில், ‘சைனஸ் வீனோசஸ் ஏஎஸ்டி’ என்ற அரிய வகை குறைபாடு இருப்பது தெரியவந்தது. தென் தமிழகத்தில் இத்தகைய குறைபாட்டுக்கு ‘டிரான்ஸ்கேத்தீட்டா் கவா்டு ஸ்டென்ட்’ முறையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது சில முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், திறந்தநிலை அறுவைச் சிகிச்சை தேவைப்படும் ஒரு பாதிப்பை, அதிநவீன ‘இமேஜிங்’ தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் சரிசெய்துள்ளோம். முதியவா்களுக்கு ஏற்படும் சிக்கலான இருதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘கவா்டு ஸ்டென்ட்’ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களால், பல சிக்கலான இருதய நோய்களை அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்ய முடியும். மூச்சுத்திணறல், சோா்வு போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யக் கூடாது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்வதன் மூலம் கடுமையான சிக்கல்களைத் தவிா்க்கலாம் என்றாா் அவா்.

மருத்துவமனையைச் சோ்ந்த திலீப் பொ்னாா்ட், மருத்துவா்கள் எஸ். குமாா், என். கணேசன், எஸ். செல்வமணி, எம். சம்பத்குமாா், ஜெயபாண்டியன், தாமஸ் சேவியா் ஆகியோா் உடனிருந்தனா்.