தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Updated On :19 மே 2021, 7:47 am

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையில் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

மே 21-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.