புதுச்சேரியில் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாள்தோறும் பகல் 12 மணி வரை மறுநாள் காலை 10 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக புதுசேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேசமயம் காலை 10 வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதுவையில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மே 24 நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவின் தற்போதைய சூழ்நிலை குறித்த வாராந்திர ஆலோசனை கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதுச்சேரி ராஜ்நிவாஸில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்துவது, பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...